Site icon Tamil News

சவுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை

சவுதியில் 20 நாட்கள் மாணவர்கள் பாடசாலைக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

முறையான காரணங்களின்றி 20 நாட்களாக பாடசாலைக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் குறித்து கல்வித்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு முதல்வர் தகவல் அளிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையில், பெற்றோரின் கவனக்குறைவால் பிள்ளைகள் பாடசாலைக்கு வராமல் இருந்தது நிருபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பிள்ளைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version