Site icon Tamil News

சீனாவில், வீட்டை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அபராதம்

 

 

சிச்சுவான் மாகாணம் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் மிக நீளமான நதியான யாங்சே சிச்சுவான் பகுதி வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புகே உள்ளூராட்சி பகுதி சிச்சுவான் மாகாணத்தின் தெற்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தின்படி, வீடுகளில் பாத்திரங்களைக் கழுவாமல், தூய்மையற்ற படுக்கைகளில், உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது சுகாதாரமற்ற நிலையில் இருப்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும்.

பொது மற்றும் குடியிருப்பு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, புகே நகராட்சி “வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதற்கான தர நடவடிக்கைகள்” என்ற கொள்கையை உருவாக்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக, மக்களின் நடத்தையின் 14 அம்சங்களுக்கு அமைப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இனிமேல் உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்கள் வீடுகளில் திடீர் சோதனை நடத்துவார்கள்.

இந்த நேரத்தில், வீட்டில் மாட்டு சாணம், குப்பை, பறவை, விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான பொருட்கள் இருந்தால், வீட்டுக்காரருக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட வீடு, மீண்டும் அதே நிலை ஏற்பட்டால், இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

“விவசாயி வீட்டுக்கு வந்தால், அங்கு உடல்நிலை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. கொசுக்கள், நாய்கள் தொல்லையால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.

இதைத் தடுக்க முடியாது என்று நாங்கள் உணர்கிறோம். ஆனால் இந்த அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்” என்று உள்ளாட்சி துணைத் தலைவர் கூறினார்.

இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் உலகம் முழுவதும் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version