Site icon Tamil News

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் இம்ரான் கான் – சிறைத்துறை ஆய்வாளர்

சுமார் ரூ.5.25 கோடி ($635000) மதிப்பிலான பரிசுப்பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க அலுவலகத்திற்கு கணக்கில் காட்ட வேண்டிய விதிமுறையை மீறி, விற்று விட்டதாக 2022ல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், ஆகஸ்ட் 5-ம் தேதியன்று, இம்ரான் கானை குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு அபராதத்துடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியது.

சிறையில் பாகிஸ்தானுக்கு அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வந்தனர்.

இந்நிலையில், சிறைத்துறை தலைமை ஆய்வாளர் மியான் ஃபரூக் நசீர், நேற்று அங்கு ஆய்வு செய்து இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அறிக்கை வெளியிட்டார்.

அதில், “இம்ரான் கானின் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலர், ஃபேன், குரான் உட்பட பல புத்தகங்கள், செய்தித்தாள், ஃப்ளாஸ்க், பேரீச்சம்பழம், தேன், நறுமண பாட்டில்கள், மற்றும் சோப் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.”

“மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் தரமான உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது உடல் நலனை காக்கவும், அவசர உதவிக்காகவும் 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். தவிர பூஜையறை, மேற்கத்திய பாணியிலான கழிவறை, கை கழுவும் பேசின் ஆகியவையும் அவர் கேட்டதற்கு இணங்க கொடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இம்ரான் கானும் திருப்தி தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version