Site icon Tamil News

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

Immigration and Emigration officials prepare the passports at the Department of Immigration and Emigration, in Colombo, Sri Lanka, 07 February 2023. EFE-EPA/CHAMILA KARUNARATHNE

இலங்கையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை அறிவித்துள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) ஒக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கோருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version