Site icon Tamil News

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு பதுளை பிரதான புகையிரத விதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இன்று (31) மாலை 4 மணியளவில் இச் சம்பவம் கொட்டகலை. மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று காலை பதுளை நோக்கி புறப்பட்டு சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

புகையிரதத்தினை தடம் அமர்த்துவதகான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version