Site icon Tamil News

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பிரான்ஸில் அச்சுறுத்தும் காட்டுத்தீ

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில் பிரான்ஸிலும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.

தற்போது பிரான்ஸின் தெற்கு பகுதியான Frontignan இல் காட்டுத்தீ பரவி வருகிறது.

இதுவரையான நிலவரப்படி அங்கு 320 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு வாகனங்களிலும், உலங்குவானூர்திகளிலும் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த முற்பட்டு வருகின்றனர்.

350 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி வருகின்றனர்.

இன்று திங்கட்கிழமை நண்பகலின் பின்னர் உள்துறை அமைச்சர் Gérald Darmanin சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version