Site icon Tamil News

இலங்கையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட தாக்கம் : 09 மரணங்கள் பதிவு!

ஒரு மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 09 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள போதிலும், அதிக தொற்றுநோய்க்கு பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்தார்.

வெள்ள நிலைமை தணிந்துள்ள போதிலும் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் அபாயம் இன்னும் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் திரு.உபுல் ரோஹன தெரிவித்தார்.

Exit mobile version