Site icon Tamil News

ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் புலம்பெயர்ந்தோர்!

ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் கூட்டு அரசாங்கமானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் ஜெர்மனியில் இவ்வாறான அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்றுடைய விவாதம் ஜெர்மன் பாராளுமன்றத்தில் இடம்பெற்று இருந்தது.

அதாவது அகதிகளை கட்டுப்படுப்படுத்துவதற்கும் நிராகரிக்கப்பட்ட அகதிகளை வெகு விரைவில் தமது சொந்த நாடுகளுக்கு கடத்துவதற்கு ஏற்ற வகையில் 40 புதிய திருத்தங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் குறிப்பாக எவர் ஒருவர் நாட்டை விட்டு கடத்தற்கு இருக்கும் பொழுது அவரை 28 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கும், இந்நிலையில் நாடு கடத்தப்படுகின்றவர்களுக்கு அவர் எத்தனையாம் திகதி தனது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படபோகின்றார் என்பதை அரசாங்கமானது அறிவிக்க தேவை இல்லை என்று இந்த புதிய சட்டத்தில் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது அகதி விண்ணப்பம் விசாரணை காலங்களை 3 மாதங்களில் நிறைவு செய்வதற்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் உத்தேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

Exit mobile version