Tamil News

பூஜையுடன் ஆரம்பமானது இளையராஜா பயோபிக்… ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா?

மல்டி ஸ்டாராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு கேப்டன் மில்லர் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்ததாக குபேரா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

இதுதவிர ராயன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதோடு இயக்கியும் இருக்கிறார். இது நடிகர் தனுஷின் 50-வது படமாகும்.

மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற ரொமாண்டிக் படத்தையும் இயக்குகிறார் தனுஷ். இதில் அனிகா, மேத்யூ தாமஸ், என இளம் நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இந்த வரிசையில லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் தான் இசைஞானி இளையராஜா பயோபிக்.

இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இசைஞானியாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றும் இப்படத்தில் கலை இயக்குனராக முத்துராஜ் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இளையராஜா பயோபிக் படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

மேலும் தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இளையராஜா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இந்த நிகழ்வின் போது வெளியிட்டனர்.

கையில் ஹார்மோனிய பெட்டியுடன் இளையராஜா முதன்முதலில் சென்னைக்கு வந்திறங்கியதை நினைவுபடுத்தும் வகையிலான புகைப்படம் அந்த பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்று உள்ளது.

Exit mobile version