Site icon Tamil News

தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் வரும்.. மொழியை மாற்றும் WhatsApp

செல்போன்கள் உருவான காலத்தில் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகளை மட்டுமே அனுப்பிக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அது 90ஸ் கிட்ஸ்களின் பொற்காலம் என்றே கூறலாம். ஒவ்வொரு மெசேஜ்களையும் பார்த்து பார்த்து அனுப்பிய காலம் அது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் விடிய விடிய ஒருவருக்கொருவர் மெசேஜ் செய்து கொண்டாலும் அதற்கு எந்த விதமான கட்டணங்களும் கிடையாது.

அதற்காக நாம் இன்று பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்களில் பலதரப்பட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் உலக அளவில், அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி தான் வாட்ஸ்அப். தொடர்ச்சியாக அந்நிறுவனம் தங்களுடைய மெசேஜிங் சேவைகளை மெருகேற்றிக்கொண்டே வருகிறது.

இந்திய அளவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான நபர்கள் whatsapp-யை பயன்படுத்தி வருவதே அதற்கு முக்கிய காரணம். இந்த சூழலில் வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுதான் நாம் பேசினாலே அதை மெசேஜ்களாக மாற்றக்கூடிய ஒரு வசதி.

ஏற்கனவே நமது மொபைல் போனில் உள்ள Keyboardல் இந்த வசதியை நாம் பெறலாம் என்றாலும், வாட்ஸ் அப் நிறுவனமே இதற்கு தனியாக ஒரு அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நாம் தமிழில் பேசினால் ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் பேசினால் தமிழிலும், இன்னும் பல மொழிகளிலும் மொழிபெயர்த்து மெசேஜாக அதை மாற்றும் ஒரு அமைப்பை whatsapp நிறுவனம் விரைவில் கொண்டு வருகின்றது.

மெசேஜ் டைப் செய்ய நேரமில்லாமல் வாய்ஸ் நோட் அனுப்புபவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த அம்சம் இன்னும் ஆய்வின் அடிப்படையில் தான் உள்ளது. விரைவில் அது அப்டேட் செய்யப்படும்.

Exit mobile version