Tamil News

‘வீடு வாங்கினால் மனைவி இலவசம்’ -ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!

இன்றைய நவீன உலகில் பொருட்களை விற்பனை செய்ய நிறுவனங்கள் பல்வேறு உத்திகளை கையாளுகின்றன. அதில் விளம்பரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் மக்களை ஈர்க்கும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் விநோதமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் சீனாவின் டிரையஜின் நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும் தனது வீடுகளை விற்பனை செய்ய வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது.ஆனால் அது மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி அரசாங்கத்தின் கவனத்தையும் தன்பக்கம் இழுத்தது.

China: Mortgage Boycott Could Deepen Real Estate Crisis

அது என்னவெனில் வீடு வாங்கினால் மனைவி இலவசம் என்று சமூகவலைதளங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுமார் ரூ.3 லட்சம் அபராதம் விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடுகளை வாங்கி உங்களது மனைவிக்கு கொடுங்கள் என்ற தங்களது விளம்பரம் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version