Tamil News

‘ஆசியா பாதுகாப்பாக இருந்தால்தான் அமெரிக்காவும் பாதுகாப்பாக இருக்கும்’ – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

ஆசியாவில் உத்திபூர்வக் கூட்டணி, பங்காளித்துவம் ஆகியவற்றை வலுப்படுத்திக்கொள்ள அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டுத் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.

விதிகளின் அடிப்படையிலான புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாகவும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் முடிவால் இந்தக் கடப்பாடு மாறாது என்றும் அவர் உறுதியளித்தார்.ஜூன் 1ஆம் திகதி, ஷங்ரிலா கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

புதிய வளரும் பங்காளித்துவம் பற்றி அவர் குறிப்பிட்டதையடுத்து, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நேட்டோ போன்ற கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிடுகிறதா என்று சீனப் பேராளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆஸ்டின், நட்பு நாடுகளுடனும் பொதுவான கண்ணோட்டம், விழுமியங்களைக் கொண்ட பங்காளித்துவத் தரப்புகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கை இது என்று கூறினார்.

நேட்டோவின் கிழக்குப் பகுதி விரிவாக்கம்தான் உக்ரைனியப் போருக்குக் காரணம் என்று சீனப் பேராளர் முன்வைத்த கருத்தை அமைச்சர் ஆஸ்டின் நிராகரித்தபோது பங்கேற்பாளர்கள் பலரும் கைதட்டி அதை ஆதரித்தனர்.

Austin says US 'can be secure only if Asia is' | Philstar.com

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா, சீனா என இரு நாடுகளும் போட்டியிடும் வேளையில், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, காஸா நெருக்கடி போன்ற விவகாரங்களால் வாஷிங்டனின் கவனம் சிதறுவதாக நட்பு நாடுகள் வெளிப்படுத்திய கவலையைத் தணிக்கும் விதமாக அவர் பேசினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகையில் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் மோதல்கள் நடைபெறும் வேளையில் இந்தோ பசிபிக் வட்டாரத்திற்கு அமெரிக்கா முன்னுரிமை தருவதாக அவர் குறிப்பிட்டார்.

“இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் உலக நாடுகள் அனைத்துக்குமான 21ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து வடிவமைக்கும். இந்த வட்டாரத்தின் பாதுகாப்பையும் வளப்பத்தையும் கட்டிக்காப்பதுதான் அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் கொள்கையின் முக்கியக் கருவாக அமைந்திருக்கும்,” என்று திரு ஆஸ்டின் கூறினார்.

“ஆசியா பாதுகாப்பாக இருந்தால்தான் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க முடியும். அதனால்தான் இந்த வட்டாரத்தில் நீண்டகாலமாக அமெரிக்கா அதன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது,” என்றார் அவர்.

Exit mobile version