Site icon Tamil News

சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன்; பிரிட்டனின் நிதி அமைச்சர் உறுதி

பிரிட்டனின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உள்கட்டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் விவகாரங்களைக் களைய உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வரவும் தீவிரமாகச் செயல்பட இருப்பதாகப் புதிய பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஜூலை 8ஆம் திகதியன்று உறுதி அளித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்காக சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுக்கப்போவதாக அவர் கூறினார்.

அண்மையில் நடந்து முடிந்த பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி பெரும்பான்மையைப் பெற்று, அரசாங்கம் அமைத்து பிரிட்டனை ஆட்சி செய்து வருகிறது.

புதிய நிதி அமைச்சராக 45 வயது வாட்டி ரேச்சல் ரீவ்ஸ் பதவி ஏற்றுள்ளார்.இவரே பிரிட்டனின் முதல் பெண் நிதி அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மாற்றம் வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் மக்கள் தொழிற்கட்சிக்கு வாக்களித்தனர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற தேவையான பணிகளை நான் தொடங்கிவிட்டேன்,” என்றார் அமைச்சர் ரீவ்ஸ்.

Exit mobile version