Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணை கொலை செய்த கணவர் – நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்

ஆஸ்திரேலியாவில் கோடரியால் தனது மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தினுஷ் குரேரா மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவி நெலோமி பெரேராவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சுமார் ஒரு மாத காலம் நீடித்த நிலையில், தற்காப்புக்காகவே தனது மனைவியைத் தாக்கியதாக அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 47 வயதான தினுஷ் குரேரா கொலை குற்றவாளி என அறிவிக்க விக்டோரியா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் மூன்று மணி நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி அன்று தனது மனைவியைக் கொன்றதை ஒப்புக்கொண்ட தினுஷ் குரேரா, தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறி கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மெல்போர்ன் வீட்டில் நடந்த வாக்குவாதத்தின் போது மனைவி கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

43 வயதான இலங்கைப் பெண் 35 காயங்களினால் உயிரிழந்துள்ளதாக சட்டத்தரணிகள் ஜூரிக்கு அறிவித்திருந்தனர்.

இந்த மோதலின் போது வீட்டை விட்டு ஓட முற்பட்ட 17 வயது மகனை தாக்கியதையும் சந்தேக நபர் மறுத்துள்ளார்.

சுமார் நான்கு வாரங்களாக தம்பதியரின் இரு பிள்ளைகளிடமும் சாட்சியத்தை கேட்ட விக்டோரியா உச்ச நீதிமன்ற நடுவர் குழு இன்று இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தினுஷ் குரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்.

Exit mobile version