Site icon Tamil News

கோமாவிலிருந்து மீண்ட கணவன்.. மொத்த நன்கொடையையும் திருப்பியளிக்கும் மனைவி

சீனாவில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவன் மீண்டு வந்ததை அடுத்து, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடையை திருப்பி அளிக்க பெண் ஒருவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 4,000 பேர்கள் குறித்த பெண்ணின் சமூக ஊடக விளம்பரம் பார்த்து உதவி செய்துள்ளனர். மொத்தம் 81.71 லட்சம் தொகையை தற்போது அவர் திருப்பித்தர முன்வந்துள்ளார்.

ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த ஜியாங் லீ கடந்த 2020ல் நடந்த கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை, அவரது மனைவி டிங் உடனிருந்து கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து வந்தார்.ஜியாங் லீயின் மருத்துவ செலவினங்களுக்கு சேமிப்பு பணம் முழுவதும் செலவானது. இதனால் சமூக ஊடக பக்கத்தின் மூலம் தனது கணவரின் நிலையை எடுத்துக் கூறி நிதி திரட்டினார் டிங்.

மொத்தம் 4,055 நன்கொடையாளர்கள் நிதியுதவி செய்ததில் 26,500 டொலர்(ரூ.81.71 லட்சம்) நன்கொடை கிடைத்தது. அதோடு, ஜியாங் லீ விரைவில் குணமடைவார் என்ற ஆறுதல் தகவல்களையும் நன்கொடையாளர்கள் டிங்குக்கு அனுப்பி வந்துள்ளனர்.

இந்த சம்பவம் டிங்கை மிகவும் நெகிழவைத்தது. மட்டுமின்றி டிங்கின் அர்ப்பணிப்பான கவனிப்பால் ஜியாங் லீ மெல்ல நடக்கத் தொடங்கியதுடன், மறுபடியும் பேசவும் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்யும் நிலைக்கு திரும்பினார்.

ஏற்கனவே நன்கொடையாளர்கள் தகவல்களை பாதுகாத்து வந்துள்ள டிங், தற்போது தமது கணவன் கோமாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், அந்த தொகையை திருப்பித்தரும் முடிவுக்கு வந்துள்ளதை சமூக ஊடக பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version