Site icon Tamil News

சூறாவளி அபாயம்! அமெரிக்கவில் அவசரநில பிரகடனம்!

சூறாவளி அபாயம் காரணமாக அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழன் காலை 5 மணி நிலவரப்படி, ஹெலினில் அதிகபட்சமாக மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசியது, மேலும் அது வடகிழக்கு நோக்கி மணிக்கு 12 மைல் வேகத்தில் நகர்கிறது என்று சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

புளோரிடா, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் விர்ஜினியா ஆகிய மாநிலங்கள் சூறாவளியால் பாதிக்கப்படலாம் என அமெரிக்கத் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

ஹெலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை முதலில் தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) அந்தந்த மாநிலங்களில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version