Site icon Tamil News

ஹங்கேரியின் ஜனாதிபதி பதவி விலகுகிறார்

ஹங்கேரி அதிபர் கேட்லின் நோவக் அந்தப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடர்பான வழக்கில் உண்மைகளை மறைக்க உதவிய குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதன் பின்னணியில் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அந்த சம்பவம் காரணமாக ஹங்கேரி ஜனாதிபதி பதவி விலகுமாறு பலத்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் அதிபர் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த ஜனாதிபதி, உரிய தீர்மானத்தின் மூலம் தான் தவறிழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே தான் ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும் கடைசி நாள் இதுவே என ஹங்கேரி ஜனாதிபதி கேட்லின் நோவக் நேற்று அரச தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

Exit mobile version