Tamil News

பிரித்தானியாவில் இயற்கை காப்பகம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சம்!

பிரித்தானிய இயற்கை காப்பகத்தில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் சால்ஃபோர்டு நகரில் உள்ள கெர்சல் டேல் இயற்கை காப்பகத்தில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் நடந்து சென்ற பாதசாரிகள், அடையாளம் தெரியாத பொருள் ஒன்றை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், அது பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு என்பதை உறுதி செய்தனர்.

Human remains found in Salford wetlands near Manchester United training  academy

மனித எச்சத்தில் அடையாளம் காணும் அம்சங்கள் இல்லாததால், அதன் பாலினம் மற்றும் வயது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அது வயது வந்த நபர் ஒருவர் என்பதும், 24 முதல் 36 மணி நேரத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் என்பதும் கணிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் எப்படி இறந்தார் என்பதை அறிய முழுமையான பரிசோதனை நடத்தப்பட உள்ளது. மனித மார்பைத் தவிர, பிற உடல் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மர்மம் மேலும் அதிகரித்துள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை, இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு உதவும் எந்த தகவலும் இருந்தால் பொதுமக்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version