Site icon Tamil News

கையடக்க தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறதா என உறுதி செய்வது எப்படி?

உங்களின் ஃபோன் ஹேக் அல்லது ஒட்டுக் கேட்கப்படவில்லை என்பதை, உறுதி செய்வதற்கான வழிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

செல்ஃபோன் பயன்பாடு:
ஸ்மார்ட் ஃபோன்கள் தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மனிதனின் ஆறாம் விரலாகவும் உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்கி, நமது தனிப்பட்ட விவரங்கள் வரை அனைத்தையும் அறிந்த ஒரு தகவல் களஞ்சியமாகவே ஸ்மார்ட்ஃபோன் உருவெடுத்துள்ளது. எந்த ஒரு தகவலையும் நொடி நேரத்தில் நம்மால் அறிய முடியும். அதேநேரம், இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் நமக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்புள்ளது. அதாவது ஸ்மார்ட் ஃபோனில் உள்ள நமது தனிப்பட்ட நபர்களால் திருடப்பட்டு, அது நமக்கு எதிராகவே பயன்படுத்தக் கூடும். எனவே, நமது ஸ்மார்ட்ஃபோன் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுகிறதா அல்லது ஒட்டுக் கேட்கப்படுகிறதா என்பதை எப்படி உறுதி செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். இதை உறுதி செய்துகொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியமாகும்.

ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள்:
ஹேக்கர்களை உங்கள் ஸ்மார்ட்ஃபோனை திருடி உங்களுக்கே தெரியாமல் ஹேக்கிங் செயலிகளை, உள்ளே நிறுவலாம். அதுபோக, போலியான விளம்பரங்கள் மூலமும் உங்களை தவறான இணைய பக்கங்களை அணுகச் செய்து, ஹேக்கிங் செயலிகளை உங்களது ஸ்மார்ட்ஃபோனில் நிறுவலாம். அப்படி நிறுவப்பட்டு ஹேக் செய்யப்பட்டால், பின்வரும் அறிகுறிகளை நீங்கள் உணரலாம்.

1.செயல்திறன் பாதிப்பு:
உங்களது ஸ்மார்ட்ஃபோன் மெதுவாக இயங்குவது, இணையப் பக்கங்கள் மற்றும் பயன்பாடுகளை அணுகுவது கடினமாவது, பேட்டரி சார்ஜ் ஆவதற்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வது ஆகியவை ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும்.

2.ஸ்மார்ட்ஃபோன் அதிகம் சூடாகிறதா?
சாதனத்தின் செயல்திறன் சிக்கல்களைப் போலவே, பின்னணியில் இயங்கும் செயலிகள் கூடுதல் ஆற்றலை பயன்படுத்தலாம். இதனால் ஸ்மார்ட்ஃபோனின் செயல்திறன் குறைவதோடு, அது சூடாக அல்லது அதிக வெப்பமடைவதை உணரலாம்.

3.மர்ம பயன்பாடுகள்:
நீங்கள் பதிவிறக்கம் செய்யாத செயலிகள், நீங்கள் மேற்கொள்ளாத அழைப்புகள், அனுப்பாத குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்தால் தவறு நேர்ந்திருப்பதை உணர்ந்த வேண்டும். பிரீமியம் கட்டண அழைப்புகள், செய்திகளை அனுப்ப அல்லது உங்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கு தவறான செய்திகளை அனுப்ப ஹேக்கர் உங்கள் மொபைலை பயன்படுத்தியிருக்கலாம். இதேபோல், உங்கள் டேட்டா பயன்பாடு எதிர்பாராத விதமாக அதிகரித்து இருந்தாலும், அதனை கவனித்தில் கொள்ள வேண்டும்.

4.பாப்-அப்கள் அல்லது திரையில் மாற்றங்கள்:
மோசடி பாப்-அப்கள், முகப்புத் திரையில் மாற்றங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான இணையதளங்களுக்கான புக்மார்க்குகளுக்குகளும் ஹேக்கிங்கை உணர்த்தக் கூடும். மற்ற மின்சாதன பொருட்கள் அருகே ஃபோனை வைக்கும்போது, அது அநாவசியமாக செயல்படுவது. அநாவசியமான சத்தங்கள் வருவது, திடிரென ஃபோனின் திரை ஆன்/ஆஃப் ஆவது, சுவிட்ச் ஆஃப் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வது, கேமரா மற்றும் மைக்ரோஃபோன் தானாக ஆன் ஆவது என, தனிப்பட்ட முறையில் நீங்கள் செய்யாத எந்தவொரு மாற்றங்களை கண்டாலும், அது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

உறுதி செய்வதற்கான கோட்கள்:
உங்கள் ஸ்மார்ட்ஃபோனை உங்களை தவிர வேறு யாராவது அணுகுகிறார்களா என்பதை உறுதி செய்ய சில கோட்கள் உள்ளன.

*#62# பதில் அளிக்கப்படாத அழைப்புகள் – உங்களுக்கு வரும் அழைப்புகளை நீங்களே அறியாமல், வேறு எண்ணுக்கு யாராவது Forward செய்து இருக்கிறார்களா என்பதை அறிய உங்களது ஸ்மார்ட்ஃபோனில் *#61# என்ற எண்ணை பதிவு செய்யுங்கள்

*#21# ஒட்டுக்கேட்கப்படுகிறதா? – சில ஆண்ட்ராய்டு ஃபோன்களில் *#21# டயல் செய்தால், உங்கள் சாதனத்தின் மைக்ரோஃபோன் இயக்கப்பட்டுள்ளதா என்பதைக் காண்பிக்கும், அதில், ஏதேனும் பயன்பாடுகள் தற்போது “RECORD_AUDIO” அனுமதியை பெற்று இருந்தால், உங்கள் உரையாடல்கள் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று அர்த்தம்.
ஏதேனும் தவறான செயலிகள் உங்களது செல்போனில் யாரேனும் நிறுவிவிட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால், ##4636## or ##197328640## என்ற எண்களை டயல் செய்யுங்கள். அது செல்போனின் மொத்த செயல்பாடு மற்றும் சேவையை திரையில் காட்டும். அதன் மூலம், நீங்கள் உங்களது சாதனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
ஹேக்கிங்கை முறியடிப்பது எப்படி?
உங்களது ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு மென்பொருளை நிறுவி இயக்குங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்யாத செயலிகளையும், ஆபத்தான குறுஞ்செய்திகளையும் நீக்குங்கள். பின்னர் உங்கள் மொபைல் பாதுகாப்பு மென்பொருளை மீண்டும் இயக்குங்கள்.
இன்னும் சிக்கல்கள் இருந்தால், உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்வது நல்ல விருப்பமாக இருக்கும். உங்களது புகைப்படங்கள், தொடர்புகள் மற்றும் பிற முக்கியத் தகவல்கள் கிளவுடில் சேமிக்கப்பட்டு இருந்தால், தாராளமாக அவற்றை டெலிட் செய்யலாம்.
கடைசியாக, உங்கள் ஃபோனில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரங்களை சரிபாருங்கள். ஏதேனும் மோசடி பணப்பரிமாற்றங்கள் நடந்து இருந்தால், உடனடியாக வங்கியை அணுகி அந்தக் கணக்குகளை முடக்குங்கள். பாஸ்வேர்டை மாற்றி வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லை அப்டேட் செய்யுங்கள்.
ஹேக் செய்யப்படுவதை தவிர்ப்பது எப்படி?
சரியான ஆன்லைன் பாதுகாப்பு செயல்யை பயன்படுத்துவது நல்லது
ஃபோனையும் அதில் பயன்படுத்தப்படும் செயலிகளையும் அப்டேட் செய்து பயன்படுத்துவது அவசியம்
பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை வசதியை பயன்படுத்தும்போது, VPN செயலியை பயன்படுத்தலாம்
அனைத்து செயலிகளுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒவ்வொரு செயலிக்கும் ஒரு வலுவான மற்றும் வித்தியாசமான பாஸ்வேர்டை பயன்படுத்தலாம்
பொது இடங்களில் ஃபோனை சார்ஜ் செய்வதை தவிர்க்கலாம்
உங்கள் ஃபோன் என்க்ரிப்டட் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
செல்ஃபோனை லாக் செய்வதை போன்றே உங்களது சிம் கார்டையும் லாக் செய்து பாதுகாப்பை அதிகரிக்கலாம். இணையத்தில் தேடி அதற்கான வழிமுறைகளை பின்பற்றலாம்.
தேவையற்ற நேரங்களில் உங்களது வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைப்பது நல்லது.

Exit mobile version