Site icon Tamil News

காஸாவில் பரிதாப நிலை – தொலைபேசியை சார்ஜ் செய்ய சூரிய சக்தியை நாடும் மக்கள்

காஸாவில் போருக்கு நடுவே கையடக்கதொலைபேசிகளுக்கு சார்ஜ் செய்வது  சவாலாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தாரைப் பற்றித் தெரிந்துகொள்ள தங்களுக்கு கையடக்க தொலைபேசி மிகவும் முக்கியமான விடயமாகியுள்ளதென குறிப்பிட்டுள்ளனர.

மேலும், உணவு, தண்ணீர் போன்றவை எங்கு கிடைக்கும், இருண்ட கூடாரங்கள், சாலைகளில் செல்லும் போது வெளிச்சத்தைப் பெற போன்ற வெவ்வேறு காரணங்களுக்குக் கைத்தொலைபேசி தேவைப்படுவதாகக் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்

அதற்காக அவர்கள் செல்வது ராஃபாவில் (Rafah) உள்ள எமிராட்டி (Emirati) மருத்துவமனைக்கு செல்வதாகவும் மருத்துவமனைக்கு வெளியே  கைத்தொலைபேசிக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் இருந்தால் மின்சாரம் வழி சார்ஜ் செய்யலாம். இல்லையென்றால் சூரியத்தகடுகள் வழி சார்ஜ் செய்யலாம். சூரியத்தகடுகள் இருக்கும் சில வீடுகள் அல்லது கடைகள் வெளி ஆட்கள் கைத்தொலைபேசியை சார்ஜ் செய்ய அனுமதிக்கின்றன.  ஆனால் அதற்குக் கட்டணம் விதிக்கின்றன.

பலரால் அந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. கைத்தொலைபேசியை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்வது முடியாத காரியமாகும். அதிகபட்சம் 70 சதவீதம் செய்தால் பெரும் காரியம் என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

Exit mobile version