Site icon Tamil News

செங்கடல் பகுதியில் மட்டுமல்ல இஸ்ரேலுக்கு செல்லும் அனைத்து கப்பல்களும் குறிவைக்கப்படும்! ஹூதிகள் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும் யேமனின் ஈரான் ஆதரவு ஹூதிகளால் குறிவைக்கப்படும் எனவும் செங்கடல் பகுதியில் மட்டுமல்ல என குழுவின் தலைவர் அப்துல்மாலிக் அல்-ஹூதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காசாவில் ஹமாஸுடன் இஸ்ரேல் நடத்திய போரின் போது பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமைக்கான பிரச்சாரம் என்று அவர்கள் கூறும் வகையில், இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை மத்தியதரைக் கடல் வரை நீட்டிக்கப் போவதாக அந்தக் குழு மிரட்டியுள்ளது.

சீனா, ரஷ்யா, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று அல்-ஹூதி வலியுறுத்தினார்.

ஹூதிகள் தங்கள் முக்கிய இலக்குகள் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரித்தானியா என்று முன்னர் கூறியுள்ளனர்.

“எல்லோரும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன துறைமுகங்களுக்கு கொண்டு செல்வதை நிறுத்த வேண்டும்… மத்தியதரைக் கடல் நோக்கி அல்லது எந்த திசையிலும் இஸ்ரேலிய எதிரிக்கு கொண்டு செல்வதை நிறுத்துவது அனைத்து நிறுவனங்களின் நலன்களாகும்” என்று அல்-ஹூதி கூறினார்.

ஹூதி தாக்குதல்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையேயான ஒரு முக்கிய வர்த்தகப் பாதையை சீர்குலைப்பதன் மூலம் கப்பல் மற்றும் காப்பீட்டுச் செலவுகளை உயர்த்தியுள்ளன, இதனால் கப்பல் நிறுவனங்கள் தென்னாப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட மற்றும் அதிக விலையுயர்ந்த பயணங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

Exit mobile version