Site icon Tamil News

பிரித்தானிய இளவரசி Anne மருத்துவமனையில் அனுமதி – குதிரையால் நேர்ந்த கதி

இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள தனது தோட்டத்தில் குதிரையால் தாக்கப்பட்டதில் சிறிய காயங்களுக்கு உள்ளான இளவரசி Anne மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

73 வயதான இளவரசி Anne, குதிரை உதைத்ததாலும் குதிரையின் தலையில் மோதியதாலும் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் இந்த வார இறுதி வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version