ஐரோப்பா

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் வெடிகுண்டு மீட்பு : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

  • April 22, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெடிபொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். உக்ரைனுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தற்செயலாக வெடிகுண்டு வீசி விபத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து இடம்பெற்ற இரண்டு நாட்களில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கும் போர் விமான சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

இந்தியா

பழிதீர்க்க 8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த திருநங்கை; சாக்கடையில் மீட்டெடுக்கப்பட்ட உடல்!

  • April 22, 2023
  • 0 Comments

ஹைதராபாத்தில் 8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசிய திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலுள்ள சானத் நகரில் சாக்கடையில் சிறுவனின் உடல் மூட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அது வாசிம்கானின் மகனான, அப்துல் வாகித் என்ற 8 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. அப்பகுதியிலுள்ள CCTVயில் பார்க்கும் போது திருநங்கையான இம்ரான், மற்றொருவரோடு சாக்கு மூட்டையில் உடலை கொண்டு வந்து சாக்கடைக்குள் வீசியது பதிவாகியுள்ளது.இதனை தொடர்ந்து குற்றவாளியான திருநங்கை […]

ஐரோப்பா

ஜெர்மன் இராஜதந்திரிகளை வெளியேற்றும் ரஷ்யா!

  • April 22, 2023
  • 0 Comments

ஜேர்மன் இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளதாக அரசு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பெர்லினில் இருந்து தனது தூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கான எதிர்வினை தான் இது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  பெர்லினின் இந்த நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இது ரஷ்ய-ஜெர்மன் உறவுகளின் முழு வரிசையையும் தொடர்ந்து அழித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்லினின் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக, ரஷ்யாவிலிருந்து ஜேர்மன் இராஜதந்திரிகளை வெளியேற்ற ரஷ்ய தரப்பு முடிவு செய்தது, அதே போல் […]

ஐரோப்பா

பக்முட் நகரின் மூன்று மாவட்டங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள ரஷ்யா!

  • April 22, 2023
  • 0 Comments

மேற்கு பாக்முட்டின் மேலும் மூன்று மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள இந்த நகரம் ரஷ்ய மற்றும் உக்ரேனிய துருப்புக்களுக்கு இடையேயான சில கடுமையான போர்களின் மையமாக உள்ளது. க்ரம்ளினின் படையெடுப்புத் திட்டத்தில் மூலோபாய ரீதியில் முக்கிய பகுதியாக பக்முட் கருதப்படுகிறது. எவ்வாறாயினும், ரஷ்ய துருப்புக்கள் சில முன்னேற்றங்களைச் செய்திருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக  உக்ரைன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல்.பீரிஸ் நீக்கம்!

  • April 22, 2023
  • 0 Comments

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2023ஆம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டம் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் சனிக்கிழமை (22) காலை நெலும் மாவத்தையில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உதுராவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள ஜப்பான்!

  • April 22, 2023
  • 0 Comments

ஜப்பான் அமைச்சர் யசுகஸு ஹமாடா வடகொரிய ஏவுகணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தனது நாட்டின் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைப்பதற்கு ஒரு நீண்ட தூர ஏவுகணை தேவைப்படும் என்பதால், அதனை ஏவுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏனெனில், அத்தகைய பயிற்சிகளை பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சோதனைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது. இந்த நிலையில், வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகுமாறு ஜப்பான் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டின் அமைச்சர் யசுகஸு […]

வட அமெரிக்கா

இரவில் நாய் குரைப்பதைக் கேட்டு எழுந்த கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • April 22, 2023
  • 0 Comments

கனேடிய பெண் ஒருவர், இரவில் விடாமல் நாய் குரைப்பதைக் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றிருக்கிறார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் Sharon Rosel என்னும் பெண், இரவு 3.00 மணிவாக்கில் பயங்கரமாக நாய் குரைப்பதைக் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.அப்போது, கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் கதவு திறந்திருப்பதை அவர் கவனித்துள்ளார். யார் கதவைத் திறந்தது என்று பார்க்க அவர் செல்ல, அப்போதுதான், கார் கதவைத் திறந்தது மனிதர்கள் அல்ல என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. கார் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மென்பொருளை பயன்படுத்தும் உக்ரைன்!

  • April 22, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் போர்க்குற்றங்களை விசாரிக்க உக்ரைன் மென்பொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மென்பொருள் உளவுத்துறை தரவு மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஒருங்கிணைத்து எதிர்கால நிகழ்வுகளில் வரைப்படம் மூலமாக ஆதாரங்களை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ,அமெரிக்க தரவு நிறுவனமான பலன்டிர் டெக்னாலஜிஸ் இன்கின் உதவுயுடன் குறித்த மென்பொருள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 78,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் : பாதுகாப்பிற்காக முப்படைகளையும் களமிறக்கிய ஜனாதிபதி!

  • April 22, 2023
  • 0 Comments

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும்,  அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரையும் களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை என்பன கொழும்பு,  கம்பஹா,  களுத்துறை,  கண்டி,  மாத்தளை,  நுவரெலியா,  காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை,  யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி,  மன்னார்,  வவுனியா,  முல்லைத்தீவு,  […]

இலங்கை

நெடுந்தீவு படுகொலை – யாழில் படகுசேவை நிறுத்தம்!

  • April 22, 2023
  • 0 Comments

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பகுதியில் இன்று  அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை […]

error: Content is protected !!