செய்தி தமிழ்நாடு

சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • April 25, 2023
  • 0 Comments

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு, கட்சியினர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் […]

ஆப்பிரிக்கா ஐரோப்பா

சூடானில் சிக்கியிருந்த 138 உக்ரேனியர்கள் மீட்பு!

  • April 25, 2023
  • 0 Comments

சூடானில் சிக்கியிருந்த 138 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 35 பெண்கள், 12 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தமிழ்நாடு

அதிமுக கொடியையோ இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடிய தகுதி ஈபிஎஸ் அணியினருக்கு கிடையாது

  • April 25, 2023
  • 0 Comments

அதிமுக கொடியையோ இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடிய தகுதி ஈபிஎஸ் அணியினருக்கு கிடையாது… அமலன் சாம்ராஜ் பிரபாகர் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பேட்டி… புரட்சித் தலைவரையும் புரட்சி தலைவி அம்மாவையும் சுவாசிக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கொடியையும் பயன்படுத்த உரிமை உள்ளது அது மட்டும் அல்லாமல் எந்த நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இதற்கு தடை விதிக்கவில்லை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் […]

இலங்கை

துனிசியா வழியாக இத்தாலி செல்ல முயன்ற படகில் பயணித்த 70 பேர் உயிரிழப்பு!

  • April 25, 2023
  • 0 Comments

இத்தாலிக்கு துனிசியா வழியாக செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து 1200 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க துனிசியா அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக துனிசியா கடல் வழியாக இத்தாலி செல்ல முயன்ற 3 படகுகளை அந்த நாட்டின் கடலோரா காவல்படை தடுத்து நிறுத்தி படகுகளில் இருந்த 1200  அகதிகளை மீட்டுள்ளனர். அத்துடன் […]

இலங்கை

வருமான வரியை குறைக்க முடியாது ; அமைச்சர் பந்துல குணவர்தன

  • April 25, 2023
  • 0 Comments

வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டளையொன்று உள்ளதாகவும், வரிகளை படிப்படியாக குறைக்க முடியாது எனவும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் உலகத் தரமான வங்கிக் […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு

  • April 25, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,  கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி ஆண்டகையிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அனுமதியுடன்இ ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மகள் தொலைத்த டெடி பியரை தேடும் தந்தை; அனைவரையிம் நெகிழ வைத்த காரணம்!

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி வருகிறார். ஊரையே அலசி அந்த பொம்மையை ஏன் தேடி வருகிறார் என அவர் பகிர்ந்த காரணம் கேட்பவர்களை மனம் நெகிழ செய்துள்ளது எப்படியாவது அதனை மகளுக்கு கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என தன்னால் இயன்ற வரை தேடி வருகிறார். அமெரிக்காவின் டெனெஸ்ஸி பகுதியை சேர்ந்தவர் டைலர் கென்னடி. இவருக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். சில காலம் முன்னர் கென்னடியின் […]

இலங்கை

புதிய கல்விக் கொள்கைக்காக 10 பேர் அடங்கிய உபக்குழுவிற்கு ஒப்புதல்!

  • April 25, 2023
  • 0 Comments

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில் பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.  

இந்தியா

கேரளாவில் அரங்கேறிய சோகம்; மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலி!

  • April 25, 2023
  • 0 Comments

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ (8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் மோசமான மின்கலம் காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. தற்காலத்தில் […]

இலங்கை

இலங்கைக்கு 350 மில்லியன் டெலர்களை கடனாக வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • April 25, 2023
  • 0 Comments

பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆசிய ஆபிவிருத்தி வங்கி 350 மில்லியன் டொலர்கள், 1.5 மில்லியன் டொலர்கள் தொழிநுட்ப உதவிகளை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியின் கீழ்  இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதற்கமைய குறித்த கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு […]

error: Content is protected !!