இலங்கை

இலங்கையில் தற்போது 119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

  • April 25, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது 119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அந்த பதினான்கு வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய கடன் திட்டத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவீத […]

ஐரோப்பா

துருக்கியில் 110 குர்தியர்கள் கைது!

  • April 25, 2023
  • 0 Comments

துருக்கிய படையினர் 110 குர்தியர்களை இன்று கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்,  ஊடகவியலாளர்கள்,  சட்டத்தரணிகள் ஆகியோர் இவர்களில் அடங்கியுள்ளனர். துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் கைதுகள் இடம்பெற்றுள்ளன. 21 மாகாணங்களில் ஏக காலத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு முற்றுகைகளில் இவர்கள் கைதாகியள்ளனர் என துருக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குர்திஷ் தொழிலாளர்; கட்சிக்கு (பிகேகே) நிதி அளித்தவர்கள்,  அல்லது புதிய அங்கத்தவர்களை சேர்த்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரச […]

இலங்கை

எரிபொருள் கோட்டவில் மாற்றமில்லை – மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு

  • April 25, 2023
  • 0 Comments

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டவில் மறு அறிவித்தல் வரை எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற பெற்றோலியக் கூட்டுதாபன மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்  மாதாந்தம் முற்பதிவு செய்யப்படும் எரிபொருட்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. கடந்த 3 வாரங்களில் நாளாந்த எரிபொருள் பாவனை மற்றும் […]

வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; பைடன் முறைப்படி வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து உள்ளேன் என அதிபர் ஜோ பைடன் முன்பிருந்தே கூறி வந்த நிலையில், அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகத்திற்கு துணை நிற்க வேண்டிய தருணம் இருக்கும். அவர்கள் தங்களது அடிப்படை சுதந்திரத்திற்காக நிற்க வேண்டி இருக்கும். இது நம்முடையது என நான் நம்புகிறேன் என ட்விட்டரில் […]

செய்தி தமிழ்நாடு

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

  • April 25, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செங்கானம் புத்தாம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் இல்லாததால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பேயாடிக்கோட்டை , செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக […]

செய்தி தமிழ்நாடு

மகேந்திரா பம்ப் செட் உரிமையாளர் வீட்டில் சோதனை

  • April 25, 2023
  • 0 Comments

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மகேந்திரா பம்ப்ஸ் நிர்வாக இயக்குநர் மகேந்திரா ராமதாஸ் வீட்டிலும் வருமானவரித்துறையினர் நேற்று காலை சோதனை மேற்கொண்டுள்ளனர். மகேந்திரா ராமதாஸ் சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகன் உறவினர் ஆவார். சென்னையில் உள்ள எம்.எல்.ஏ மோகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனம், வீடுகளில் சோரனை நடந்து வரும் நிலையில், அவரது உறவினராக மகேந்திரா ராமதாஸ் வீட்டிலும் நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனை நேற்று நள்ளிரவில் முடிந்தது. குறிப்பாக கோவையில் […]

செய்தி தமிழ்நாடு

மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு

  • April 25, 2023
  • 0 Comments

கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை ஆர்.எஸ் புரத்தில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரது இளைய மகன் மேத்யூ உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட ஏற்பட்ட போர் சூழல் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு இடையே நாடு திரும்பி உள்ளார். இந்தியா திரும்பிய அவர், உக்ரைனில் நாடு திரும்ப முடியாமல் இருந்த […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது – பந்துல குணவர்த்தன!

  • April 25, 2023
  • 0 Comments

சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கினை சிங்கப்பூரில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் இ- ட்ரீயோ நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் சரக்கு வாகன ஷோரூம் கோவையில் துவக்கம்

  • April 25, 2023
  • 0 Comments

ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான இ-ட்ரீயோ, கோவையை சேர்ந்த ஈக்ரீன் பிளானட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் அதன் முதல் எலக்ட்ரிக் சரக்கு வாகன ஷோரூமை கோவையில் இன்று துவக்கியது. இதை கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். அமேசான், பிளிப்கார்ட், டி.எட்ச்.எல் ,போன்ற முன்னணி இ-காம் லாஜிஸ்டிக் நிறுவனங்களுக்கு சரக்கு மின்சார வாகனங்களை வழங்கி வரும் இ- ட்ரீயோ நிறுவனம் அதன் […]

செய்தி தமிழ்நாடு

சர்வதேச பருத்தி கவுன்சில் அமெரிக்கா கருத்தரங்கம்

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்க பருத்தி மூலம் உச்ச செயல்திறனை அடைதல்” எனும் தலைப்பில் சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.முன்னதாக இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதில் தெற்காசியாவிற்கான காட்டன் யு.எஸ்.ஏ சப்ளை சர்வதேச பருத்தி கவுன்சில் இயக்குனர் வில்லியம் பெட்டன்டோர்ப், சுபிமா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ், இந்திய மற்றும் இலங்கைக்கான சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பீஷ் நரங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.உலக அளவில் பருத்தியின் […]

error: Content is protected !!