உலகம் முக்கிய செய்திகள்

பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்

  • April 26, 2023
  • 0 Comments

பூமியை இன்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், நாளை 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும் பேசும்பொருளாக உள்ளது. அந்தவகையில் இன்று பூமியை நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு […]

செய்தி தமிழ்நாடு

முதியவர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • April 26, 2023
  • 0 Comments

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தில் திடீரென முதியவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். 1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை சந்தித்து மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 109 முதியவர்களுக்கு புடவை, […]

செய்தி தமிழ்நாடு

கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு ரூபாய் 50,000 அபராதம்

  • April 26, 2023
  • 0 Comments

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்து மர்ம நபர் வாளையார் எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி உள்ளார். இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் இது குறித்து கேட்டபோது அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார். இதை […]

வாழ்வியல்

கூந்தல் நரையை கொஞ்சம் தள்ளிப் போடலாம்

  • April 26, 2023
  • 0 Comments

சரியான வயது வருவதற்குள் முடி நரைக்க துவங்கி விட்டதா ? இதை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி போடலாம்.  நரைமுடி என்ன காரணத்தினால் வந்தது என்பதை முதலில் அறிந்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் மரபணுவால் வந்த நரையை தவிர மற்ற அனைத்தையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். நரைமுடி உடல்நல பிரச்சனையாக இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம். இதனால் நரைமுடி தீவிரமாகாமல் மற்ற முடிகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். அதோடு நீங்கள் கவனம் செலுத்த […]

செய்தி தமிழ்நாடு

இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்

  • April 26, 2023
  • 0 Comments

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல் – பக்தர்கள் புகாரால் 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 150க்கும் மேற்பட்ட மொடையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு […]

செய்தி தமிழ்நாடு

தண்டு மாரியம்மன் கோவில் தீச்சட்டி நேர்த்திக்கடன் திருவிழா

  • April 26, 2023
  • 0 Comments

கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஊர்வலம், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலமானது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • April 26, 2023
  • 0 Comments

Whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைத்தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள Whatsapp கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை Meta வுக்கு உரித்துடைய செய்திகள் தெரிவிக்கின்றன. “ஒரு Whatsapp கணக்கு, இப்போது பல கைத்தொலைபேசியில் பயன்படுத்தலாம்” என்பது இந்த சேவையை விவரிக்கும் அம்சமாகும். இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் புதிய சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

  • April 26, 2023
  • 0 Comments

ஜெர்மனிய நாட்டில் வெப்ப மூட்டிகள் பாவனை மற்றும் கட்டணங்கள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பாராளுமன்றத்தில் கூட்டு கட்சியனது வெப்ப மூட்டிகள் விடயத்தில் புதிய ஒரு சட்டத்தை இயற்றி இருக்கின்றது. அதாவது சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற வகையில் புதிய வெப்ப மூட்டிகள் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது புதிய சட்டமாகும். இந்நிலையில் புதிய வெப்ப மூட்டியில் 60 சதவீதமான சக்திகள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற சக்திகளில் இருந்து இயங்க வேண்டும் என்று புதிய சட்டம் […]

ஆசியா

ஏமாற்று வேலைக்காக விரல்களில் காந்தங்களைப் பொருத்திய நபர் – 40 ஆண்டுகளுக்குப் பின் செய்த செயல்

  • April 26, 2023
  • 0 Comments

தாய்லந்தைச் சேர்ந்த ஒருவர் தமது விரல்களில் காந்தங்களைப் பொருத்தியள்ளார். அவர் 40 வருடங்களுக்கு அதனை கையில் வைத்திருந்ததாக மருத்துவர் Wat Lun தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான Hi-Lo பகடை விளையாட்டில் வெற்றிபெற அவர் காந்தங்களைப் பொருத்தியதாக தெரியவந்துள்ளது. விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பிய அந்த நபர் விமான நிலையப் பாதுகாப்பில் தமது விரல்களில் உள்ள காந்தங்கள் கண்டறியப்பட்டால் சமிக்ஞை ஒலிக்கும் என்று பயந்தார். அதனால் மருத்துவரிடம் அதை அகற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதைப் பற்றி வாட் லூன் தமது […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

  • April 26, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழருக்கு மரண தண்டனைய நிறைவேற்றியுள்ளது. தங்கராஜூ சுப்பையா என்ற தமிழர் தூக்கிலிடப்பட்டுள்ளார் இன்று அதிகாலை அவர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் என அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கராஜாமீது பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது சட்டசெயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிங்கப்பூர் அதிகாரிகள் இவர் கஞ்சாவை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியிருந்தனர்.

error: Content is protected !!