சூடான் துணை ராணுவத்திடம் சிக்கியுள்ள ஆபத்தான உயிரியல் ஆய்வகம்; WHO தலைவர் எச்சரிக்கை!
சூடானில் கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்ட உயிரியல் ஆய்வகம் ஒன்றை துணை ராணுவப்படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் சூடானில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தொழில்நுட்ப வல்லுநர்களால் குறித்த ஆய்வகத்தை பாதுகாக்க முடியவில்லை எனவும், தற்போது போலியோ, காலரா மற்றும் அம்மை நோயை ஏற்படுத்தும் கிருமிகளை ஆய்வு செய்யும் உயிரியல் ஆய்வகம் சிக்கலில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் […]













