இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் வெப்பமான காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

  • April 27, 2023
  • 0 Comments

இலங்கையில் வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர், இந்த காலநிலை மாற்றமடையும் என குறிப்பிடப்படுகின்றது. நாட்டில் தற்போது மழை கிடைக்கப்பெறும் நிலையில், வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது. எனினும், இன்னும் வெப்பநிலை நீங்கவில்லை. மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால், வெப்பநிலை […]

ஆசியா

சிங்கப்பூரில் வாழும் இளைஞர்களில் 10இல் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • April 27, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வாழும் இளைஞர்களில் 10இல் ஒருவர் குறைந்தது ஒரு மனநோய்ப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக தேசிய ஆய்வு ஒன்றில் அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் பின்னணியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 10 முதல் 18 வயதுடைய இளையர்களின் மன நலத்தையும் ஆரோக்கியத்தையும் புரிந்துகொள்வதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 6 விழுக்காட்டினர் ஓராண்டுக் காலத்தில் மனநலக் கோளாற்றிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரியவந்தது. மூன்றில் ஓர் இளையர் தனிமை, பதற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார். 2020 முதல் 2022 வரை […]

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

  • April 27, 2023
  • 0 Comments

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் (7-11) மாதம் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் விளையாட இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது. […]

உலகம்

அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே புதிய உடன்பாடு

  • April 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவும் தென் கொரியாவும் புதிய உடன்பாடு அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட அணுச்சக்தி தொடர்பான உடன்பாடே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் தொடரும் வேளையில் இரு நாடுகளும் புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன. தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol முதன்முறை அதிகாரத்துவப் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ளார். ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்தபோது விரிவான புதிய உடன்பாடு பற்றி அறிவிக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளில் முதன்முறை அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களைத் தென் கொரியாவில் நிறுத்த அமெரிக்கா திட்டமிடுவதாக பைடன் கூறினார். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்

  • April 27, 2023
  • 0 Comments

பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெண்கள் உட்பட ஒரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானம் திரும்பி வந்ததுடன், நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரிலிருந்து, அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தை நோக்கி கடந்த வியாழக்கிழமை (20) பறந்துகொண்டிருந்த விமானத்தில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மற்றொரு பயணியை தாக்குவதற்காக பயணியொருவர் போத்தலொன்றை ஏந்தியிருந்த காட்சியும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ் பேச்சாளர் […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் விடுத்த கோரிக்கை

  • April 27, 2023
  • 0 Comments

முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி  வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ஆதரவு கோரியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட கலவரம், தீவைப்பு, அரச வங்குரோத்து நிலைமை  போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில்  மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற  முடிந்ததாகவும், அது  ‘Srillnka comeback story என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்

  • April 27, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Île-Saint-Denis தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றப்பட்டனர். நேற்று புதன்கிழமை காலை பொலிஸாரால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 300 இல் இருந்து 500 வரையான அகதிகள் இங்கு தங்கியிருந்த நிலையில், நேற்று காலை இங்கு வந்த பொலிஸார் மற்றும் ஜொந்தாமினர் அகதிகளை பேருந்துகளில் ஏற்றி வெளியேற்றினர். குறித்த பகுதியானது 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயார்ப்படுத்தப்பட உள்ளது. அதையடுத்து நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த அகதிகள் வெளியேற்றம் இடம்பெற்றது. வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் […]

இலங்கை

இலங்கையில் 9 நில அதிர்வுகள்! பின்னணி தொடர்பில் வெளியான தகவல்

  • April 27, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 09 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது. 04 மாதங்களுக்குள் 09 தடவைகள் நில அதிர்வுகள் பதிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவென பணியகம் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலன நில அதிர்வுகள் நாட்டின் உட்பகுதியில் பதிவாகியுள்ளதுடன், சில நில அதிர்வுகள் நாட்டை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன. அதிகூடிய மெக்னிடியூட் அளவான நில அதிர்வு புத்தல – சூரியவெவ பகுதியில் பதிவாகியிருந்தது. நாட்டில் பதிவாகிய […]

இலங்கை செய்தி

Onmax DT பிரமிட் திட்டம் இன்னும் நிறுத்தப்படவில்லை

  • April 26, 2023
  • 0 Comments

Onmax DT என்ற போலி பிரமிட் திட்டம் நாட்டில் இன்னும் இயங்கி வருவதாகவும், அது இன்னும் நிறுத்தப்படவில்லை எனவும் பிரமிட் எதிர்ப்பு சங்கத்தின் ஏற்பாட்டாளர் தரிந்து ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் இன்னமும் இந்தக் கடத்தலில் சிக்கித் தவிப்பதாகக் கூறும் அவர், இதை நாடாளுமன்றம் தடை செய்தும் தொடர்ந்து இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்திடம் அமெரிக்க கணக்குகளில் 43 கோடிக்கு மேல் பணம் இருக்க வேண்டும் என்றும்,  இது பெரிய தொகைதான் தெரியவந்துள்ளது என்றும் […]

இலங்கை செய்தி

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

  • April 26, 2023
  • 0 Comments

கச்சதீவில்  அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே  கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக  தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் குறித்த விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. அத்துடன் , அது தொடர்பில் […]

error: Content is protected !!