சட்டவிரோத புலம்பெயர்வாளர்களை பிரான்சிலிருந்து விரைந்து வெளியேற்ற உதவும் மசோதா தள்ளிவைப்பு
பிரான்சில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், புலம்பெயர்தல் மசோதாவை தள்ளிவைத்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அந்த மசோதாவை நிறைவேற்றியது அரசு. அது தொடர்பான போராட்டங்கள் முற்றிலும் முடிவுக்குவந்ததுபோல் தெரியவில்லை. இந்நிலையில், புலம்பெயர்தல் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் , அந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு இல்லாததால், அதை இலையுதிர்காலத்துக்கு தள்ளிவைத்துள்ளார். இந்த மசோதா, […]













