செய்தி தமிழ்நாடு

போலீசாரை போக்குக்காட்டிய போதை ஆசாமி

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் மேல மாசி வீதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இன்று இரவு அளவுகதிகமான மது போதையில் தனது நான்கு சக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டிச் சென்று முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிவேகமாக காரை […]

இலங்கை

இலங்கையில் 58 வயதுடைய தேரரால் 16 வயதான தேரருக்கு நேர்ந்த கதி

  • April 28, 2023
  • 0 Comments

அரநாயக்க பிரதேசததில் உள்ள விஹாரை ஒன்றைச் சேர்ந்த 16 வயதுடைய  தேரர் ஒருவரை அதே விகாரையில் வசிக்கும் 58 வயதான தேரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். 16 வயதுடைய புதிய பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் விகாரையைச் சேர்ந்த  மற்றுமொரு பிக்குவை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த புதிய பிக்குவை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் […]

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்களை விரைவாக பூர்த்திசெய்த இலங்கையர்

  • April 28, 2023
  • 0 Comments

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்று சாதனை ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்து சாதனைகளும் மைல்கற்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (28) மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை வீரர் என்ற சாதனையை ப்ரபாத் ஜயசூரிய இன்று நிகழ்த்தினார். […]

செய்தி தமிழ்நாடு

திருக்கழுக்குன்றம் சித்திரை பெருவிழாவில் திரளான பக்தர்கள்

  • April 28, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் 3ம் நாள் நிகழ்வான சைவ அடியார்கள் என்று கூறப்படும் 63 நாயன்மார்களின் திருவீதி உலா இன்று நடைபெற்றது வேதகிரிஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வளமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கிரிவல பாதையை சுற்றிவந்தது வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காட்டி தரிசனம் செய்தனர் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் […]

செய்தி தமிழ்நாடு

திருமாவளவன் என்ற பெயரில் சாலை திறப்பு

  • April 28, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 9.20 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமும் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் திருமாவளவன் தெரு தார்சாலை அமைக்கப்பட்டது அதனை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு திருமாவளவன் தெரு தார் சாலையையும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் பொதுமக்கள் கையால் துவங்கி வைத்தார். அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருப்போரூர் எம் […]

செய்தி தமிழ்நாடு

டேங்கர் லாரி விபத்து-கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறியது

  • April 28, 2023
  • 0 Comments

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேண்டி கார்பன் டைஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பின்னால் வந்த காய்கறி கொண்டு செல்லும் காலியான மினி லாரி மோதியது. கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்த டேங்கர் லாரியின் […]

செய்தி தமிழ்நாடு

கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம்

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டு உள்ள அறையையும், மகளிர் காவல்நிலையத்தையும் டெல்லியை சேர்ந்த தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், ஆர்.ஜி.ஆனந்த் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குழந்தைகள் போக்சோ வழக்குகள், மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்து காவல்நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரையில் கூர்நோக்கு இல்லங்களில் எந்தப்பிரச்சனையும் இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் […]

ஆப்பிரிக்கா

சூடான் தலைநகரில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!

  • April 28, 2023
  • 0 Comments

உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற இராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கார்டூம் நகரமே போர்க்களமாக மாறியது. குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பல பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறைந்தளவே உணவு பொருட்கள் கிடைப்பாதால், வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

செய்தி தமிழ்நாடு

மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம்

  • April 28, 2023
  • 0 Comments

மதுரையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் கொட்டப்பட்டு வருவதால் சாலைகளில் மருத்துவ கழிவுகள் சிதறி அதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு குப்பைகளை அகற்றக் கூடிய தூய்மை பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள்வந்தன. இதைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் குமார் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு […]

செய்தி தமிழ்நாடு

ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி அறிவிப்பு

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை ஏப் 27 ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி அறிவிப்பு மற்றும் அறிமுக கூட்டம் வருகின்ற 30 ஆம் தேதி அன்று மாலை 3 மணி அளவில் மதுரை பாண்டி கோவில் டோல்கேட் அருகில் அம்மா திடலில் நடைபெற உள்ளது அதற்கான முகுர்த்தகால் நடும் விழா மதுரை பாண்டி கோவில் அருகே டோல்கேட் அருகில் அம்மா திடலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக […]

error: Content is protected !!