செய்தி தமிழ்நாடு

இ வேஸ்ட் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் 5 பொருட்கள் விரைவில் பார்வைக்கு

  • April 28, 2023
  • 0 Comments

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தி்ன் கீழ் கோவையில் உள்ள குளங்கள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவை தற்போது பொதுமக்கள் அதிகபட்ச பொழுதுபோக்கு இடமாக மாறி உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும் அழகு சேர்க்கும் வகையிலும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு காட்சி பொருட்கள் வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. உக்கடம் பெரியகுளம் குளக்கரையில் எலக்டிரானிக் கழிவு என்று அழைக்கப்படும் இ வேஸ்ட் கொண்டு 5 பொம்மை பொருட்கள் […]

வட அமெரிக்கா

ஆடையின்றி 40 பேர் கலந்து கொண்ட நிர்வாண இரவு உணவு விருந்து!

  • April 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க்கில் உடை ஏதுமில்லாமல், 40 பேர் நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு உணவு விருந்தை நாம் எப்படியெல்லாமோ கொண்டாடியிருக்கிறோம். மது, இசை, ஆட்டபாட்டமென தான் பொதுவாக இரவு உணவு விருந்து இருக்கும்.ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்கில் வித்தியாசமான முறையில் இரவு உணவு விருந்தை கொண்டாடியுள்ளனர். உணவும் மூச்சு பயிற்சியும் கலந்த அனுபவத்தை தர ஒரு குழுவினால் துவங்கப்பட்ட இந்த திட்டமானது, கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அபூர்வமான அனுபவத்தை தரும் ஒன்றாக […]

இலங்கை

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட விசேட வாகனங்ள் !

  • April 28, 2023
  • 0 Comments

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் 03 விசேட வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட வாகனங்கள் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் […]

ஐரோப்பா

பிரிட்டனில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள வீட்டு வாடகை

  • April 28, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளன. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ள நிலையில், மற்ற நகரங்களில் வசிப்பவர்களோ வரலாறு காணாத வகையில், மாதம் ஒன்றிற்கு 1,900 பவுண்டுகள் வாடகை செலுத்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Rightmove என்னும் இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் […]

ஆசியா

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்!

  • April 28, 2023
  • 0 Comments

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.

செய்தி தமிழ்நாடு

பட்டன் மொபைல் போன் தயாரிப்பாளரான ஜே மேக்ஸ் நிறுவனம் புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச்

  • April 28, 2023
  • 0 Comments

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய கீ பேட் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தனது விற்பனை சேவையை துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ,ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய மொபைல் அக்சரீஸ் அறிமுக விழாவை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடத்தியது. .இதில் ஜே மேக்ஸ் நிறுவனத்தின் துணை […]

இலங்கை

ஏழு பெண்களால் இளம் பிக்குவிற்கு நேர்ந்த கதி! இலங்கையில் நடந்த பகீர் சம்பவம்

  • April 28, 2023
  • 0 Comments

குருநாகல் – நிக்கவரெட்டிய பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் ஏழு பெண்களினால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் 25ம் திகதி நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 22 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த பெண்கள் பிக்கு தங்கியிருந்த விகாரைக்குள் புகுந்து, பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களான பெண்கள் பிக்குவை விகாரையில் இருந்து விலகுமாறும், பிக்கு அணிந்திருந்த காவி உடையை கழற்றுமாறும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட […]

செய்தி தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்பனையில் மூன்று பேர் கைது

  • April 28, 2023
  • 0 Comments

கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அஷ்யா கேரளா லாட்டரி சீட்டுகள், காருண்யா கேரளா லாட்டரி சீட்டுகள், ஸ்திரி சக்தி கேரளா லாட்டரி சீட்டுகள் என லாட்டரி சீட்டு விற்பனையில் மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேரூர் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடு ஒன்றை வாட்டி வதைக்கும் வறட்சியும் வெப்பமும்!

  • April 28, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு முன்னதாகவே வெப்பம் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. நேற்றும் இன்றும் அங்கு வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்குப்பகுதி இதுவரை காணாத அளவில் வெப்பத்தை உணரக்கூடும். ஸ்பெயினில் ஏற்கனவே வறட்சி நிலவுகிறது. காட்டுத்தீ மூளும் அபாயம் உள்ளது என்று நிபுணர்களும் பயிர்கள் பாழாகிவிடும் என்று விவசாயிகளும் எச்சரித்துள்ளனர். ஸ்பெயினின் தற்போதைய வெப்பநிலை கோடைக்காலத்தைப் போல உள்ளது. ஆண்டின் இம்மாதங்களில் வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக அதிகமாக உள்ளது […]

செய்தி தமிழ்நாடு

தலையில் சமுதாய கொடி கட்டி ஆட மாட்டேன் பகிரங்க மன்னிப்பு

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த 29 வயதான பிரபல கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரி . இவர் தான் ஆடும் வீடியோக்களை யூட்யூபில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவராக வலம் வந்தார். பரமேஸ்வரி இல்லாத கரகாட்ட நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு நிலைமை உருவானது. இதனால் மற்ற கரகாட்ட கலைஞர்கள் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பரமேஸ்வரி மீது மற்ற கலைஞர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் தனியார் பத்திரிக்கை […]

error: Content is protected !!