சித்திரை திருவிழாவில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஆலங்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். […]













