செய்தி தமிழ்நாடு

மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் போட்டோ சூட்

  • April 29, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருடன் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து பிளாஸ்டிக் நெகிழிகளிடமிருந்து கடல் வாழ் உயிரினங்களை காப்போம் என பிளாஸ்டிக் நெகிழி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். அதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

இராணுவ சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரஷ்யா!

  • April 29, 2023
  • 0 Comments

ரஷ்யா இராணுவ சேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக பிரித்தானியாக தெரிவித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் படி,  மார்ச் 2023 தொடக்கத்தில் இருந்து உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது முதல் பெரிய கப்பல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் ரஷ்யாவின் நீண்ட தூர வேலைநிறுத்தங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகுவதைக் குறிக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

செய்தி தமிழ்நாடு

கல்லூரியின் வெள்ளி விழாவில் கிரிஷ் விருதுகள்

  • April 29, 2023
  • 0 Comments

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கிரிஷ் விருதுகள் -2023 இக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி இவ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வெவ்வேறு துறைகளில் சிறப்பான சமூகப் பங்களிப்பினை வழங்கிய 25 நபர்கள் கௌரவிக்கப்பட்டனர். கோவை சாந்தி ஆசிரமத்தின் தலைவர் டாக்டர். கேஸிவினோ அறம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இவருடன் இக் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கே .சுந்தரராமன், […]

செய்தி தமிழ்நாடு

அரசு உயர் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு

  • April 29, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை நகர மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது இதில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதிகள் உள்ளதா வகுப்பறைகள் உள்ளதா என்பதை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழக பள்ளிக்கல்வித்து இப்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை […]

ஆசியா

எதிர்காலம் இல்லாத முதியவர்- ஜோ பைடனை கடுமையாக சாடிய கிம் யோ ஜாங்!

  • April 29, 2023
  • 0 Comments

வட கொரிய நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன் சகோதரி, அமெரிக்காவின் ஜோ பைடனை வருங்காலமில்லாத முதியவர் என கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தென் கொரிய ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் பேசிய ஜோ பைடன், வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கடுமையாக எச்சரித்துள்ளார்.மேலும் வடகொரிய தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்தால், அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்றும், வட கொரிய நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன் […]

செய்தி தமிழ்நாடு

டன் கணக்கில் ஐஸ்கிரீம் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

  • April 29, 2023
  • 0 Comments

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தாகத்தை போக்க தண்ணீர் பந்தல்களை திறந்து வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தல் […]

இலங்கை

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்!

  • April 29, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்;த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அவ்விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைவரம் குறித்தும் இப்பிரதிநிதிகள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர். இந்த சந்திப்பின்போது உயர் ஸ்தானிகரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்இ 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே […]

வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் அமெரிக்கா பாடல் பாடி அசத்திய தென் கொரிய அதிபர்!(வீடியோ)

  • April 29, 2023
  • 0 Comments

அமெரிக்கா வந்திருக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க பாடல் பாடி அசத்தியுள்ளார். தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காலா ஸ்டேட் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எழுபதாண்டு கால நட்பின் நீட்சியாக, வெள்ளை மாளிகையில் காலா ஸ்டேட் விருந்திற்கு யூன் சுக் இயோல் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் அமெரிக்காவில் பிரபலமான “American pie” பாடலை […]

செய்தி தமிழ்நாடு

பல் மருத்துவமனையின் கதவில் இந்த டாக்டரால் உயிரிழந்தவர்களின் பட்டியல்

  • April 29, 2023
  • 0 Comments

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் குமார் இவர் தனது தாய் இந்திராணி என்பவரை கடந்த டிசம்பர் மாதம் வாணியம்பாடியில் உள்ள பி.ஜே.நேருசாலையில் அமைந்துள்ள தனியார் பல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு இந்திராணியிற்கு பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் பிடுங்கியதாக கூறப்படுகிறது, பல் பிடுங்கியதை தொடர்ந்து இந்தராணியிற்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் இந்திராணி உயிரிழந்துள்ளார்.. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் […]

செய்தி தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்

  • April 29, 2023
  • 0 Comments

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன் மீது உள்ள வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார்.மனைவி மீது ஆசிட் ஊற்றிய சிவாவை கொலை முயற்சி வழக்கில் கைது […]

error: Content is protected !!