இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

8 இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இலங்கை மருத்துவர்!

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர் சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840000 அமெரிக்க டொலர்களை மோசடியாக பெற்றுள்ளார். இதனால் அவருக்கு  பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு […]

பொழுதுபோக்கு

லியோவில் இணையும் விக்ரம் பட வில்லன்… லோகேஷின் யுனிவர்ஸில் ட்விஸ்ட்

  • April 30, 2023
  • 0 Comments

விஜய்யின் லியோ ஷூட்டிங் கடந்த 60 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே முதல் வாரத்தில் லியோ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த ஷெட்யூலில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மூவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இந்நிலையில், விக்ரம் பட வில்லனும் லியோவில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ மிகப் பெரிய […]

இலங்கை செய்தி

சூடானில் சிக்கிய இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்!

  • April 30, 2023
  • 0 Comments

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளைஇ 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய சூடானில் இருந்து இதுவரையில் 19 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா

தொடர் கருச்சிதைவால் வருத்தத்தில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

  • April 30, 2023
  • 0 Comments

நர்சரி ஊழியரான பெண் ஒருவர் குழந்தைகள் மீதான பற்றால் தாயாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர், தொடர் கருச்சிதைவு காரணமாக மனமுடைந்து இறுதியில் அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு வேல்ஸ் பகுதியில் குடியிருந்து வந்த 26 வயது Jemma Zoezee என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் எலிகாய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி காலி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வருடத்தில் மாத்திரம் 229 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவது நெற்பயிர்களில் வேலை செய்பவர்கள் மாத்திரமல்ல என காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பஞ்சாப்பில் வாயு கசிவால் 11 பேர் உயிரிழப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு  ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளதுடன், 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நபர்களின் குடும்பத்தினர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில் என் குடும்பத்தில் மட்டும் 5 பேருக்கு சுயநினைவு இல்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினோம். எங்கள் ஊர் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். […]

ஐரோப்பா

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிக்கு எதிராக 17வது வாரமாக தொடரும் போராட்டம்

  • April 30, 2023
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைகும் வகையில் அரசு கொண்டு வரும் சட்டம் […]

ஆசியா

செவ்வாய் கிரகத்தில் நீர்.. சீன ஜூராங் விண்கலம் ஆய்வில் புதிய சாதனை.!

  • April 30, 2023
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சமீபத்திய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இதன் மூலம் அங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை எனவும், உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் […]

செய்தி தமிழ்நாடு

கன்னியாகுமரியின் இரும்பு மனிதன் ஸ்பெயினின் அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதனாக மாற பயிற்சி

  • April 30, 2023
  • 0 Comments

கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15,தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார். இதற்காக இன்று நாகர்கோவில் அருகேயுள்ள சங்கு துறை பீச்சில் 5 டன் மினி […]

இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று – இருவர் உயிரிழப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில்,  இருவர் உயிரிழந்துள்ளதாக  கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும்,  யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று 29 ஆம் திகதி  உயிரிழந்துள்ளார். […]

error: Content is protected !!