இலங்கையின் அணிசேரா கொள்கையை நாம் மதிக்கிறோம் – ரஷ்யா!
இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டகர்யான் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிர் நீத்த ரஷ்ய இராணுவத்தினரை நினைவுகூரும் வகையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தினால் தேசிய பொது நூலகத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கருகில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதி்ல் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை எதிர்கொண்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களை […]













