இலங்கை செய்தி

வெசாக் அன்று கடலுக்குச் சென்ற குட்டி ஆமைகள்

  • May 6, 2023
  • 0 Comments

பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் முயற்சியின் கீழ் சுமார் 150 ஆமை குட்டிகள் வெசாக் அன்று இரவு பாணந்துறை கடற்கரையில் கடலில் விடப்பட்டன. இதற்காக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரசன்னமாகியிருந்தது .

இலங்கை செய்தி

மருத்துவமனையில் ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருட்டு

  • May 6, 2023
  • 0 Comments

நீண்ட காலமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர்இ இன்று (06) காலை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான திருட்டு 2020 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுள்ளதாகவும் இவர்கள் திருடிய […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்!

  • May 6, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த நிலைப்பாடு விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணை செயலாளர் நாயகம் அருட்தந்தை டோனி மார்டின்  தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முழுமையான விசாரணை அறிக்கை   கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  குறித்த அறிக்கை இருவட்டுக்களாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் கைது

  • May 6, 2023
  • 0 Comments

வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நபரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். அங்கு அவரது பையில் 84 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 600 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேகநபர் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐரோப்பா

ரஷ்யாவின் ஹைபர் சோனிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 6, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் ஹைபர் சோனிக் ஏவுகணையை அமெரிக்கா வழங்கிய பெட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் அதி நவீன ஏவுகணைகளில் ஒன்றை அந்நாடு இடைமறித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இது குறித்து டெலிகிராம் இடுகையில் பதிவிட்டுள்ள விமானப்படை தளபதி, மைகோலா ஓலேஷ்சுக்,   உக்ரைன் தலைநகரில் ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கின்சல் வகை பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிக்கப்பட்டது என்று கூறினார். Kh-47 ஏவுகணை ரஷ்ய பிரதேசத்தில் இருந்து MiG-31K விமானம் […]

செய்தி தமிழ்நாடு

கோடைகாலம் என்பதால் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை இல்லை

  • May 6, 2023
  • 0 Comments

சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுடைய பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா. செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் வழக்கமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் அந்த நாளில் விலங்குகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளும் விடுமுறையின்றி இயங்கும் என வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் விலங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி தமிழ்நாடு

வீட்டிற்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி

  • May 6, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று மாலை பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெளியேறாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டு பகுதியில் சாத்தான்குட்டை தெரு, வெள்ளகுளம் தெரு ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதியாக உள்ளதால் அனைத்து தெருக்களில் இருந்தும் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வழியாக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய பிரதான கால்வாயான மஞ்சள் நீர் கால்வாய் வழியாக மழை நீர் சென்று வடிய தொடங்குகிறது. இந்நிலையில் சாத்தான்கோட்டை […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் உள்நாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்!

  • May 6, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டன் நியமி்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான உத்தரவை, அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார். இது கரு்த்து வெளியிட்டுள்ள ஜோ பைடன்,  பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்புஇ குடியேற்றம்இ கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் […]

ஆஸ்திரேலியா

சிட்னியில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்

  • May 6, 2023
  • 0 Comments

இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் சிட்னி நகரில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரில் உள்ள சுவாமி நாராயண் கோவில் சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்கோவிலில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனால் இத்தாக்குதலை நடத்தியது காலிஸ்தான் ஆதரவாளர்களா என பொலிஸார் தீவிர விசாரணை […]

ஐரோப்பா

முடியாட்சி எதிரான ஆர்ப்பாட்ட குழுவின் தலைவர் கைது!

  • May 6, 2023
  • 0 Comments

பிரிட்டனில் முடியாட்சியை எதிர்க்கும் குழுவின் தலைவர்கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெறவுள்ள முடிசூட்டும் நிகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னர் சார்ல்ஸின் ஊர்வலபாதையில் ஆர்ப்பாட்டம் செய்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ரிப்பப்ளிக்கின் தலைமைநிறைவேற்று அதிகாரி கிரஹாம் ஸ்மித் டிரபல்ஹார் , முடிசூட்டும் நிகழ்வு பிரதானமாக இடம்பெறும் டிரபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களிற்காக குளிர்பானங்கள் பதாகைகளை சேகரித்துக்கொண்டிருந்தவேளை பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். வான் ஒன்றின் பின்னால் நூற்றுக்கணக்கான பதாகைகளுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை ஸ்மித் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இன்றைய தினத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை […]

error: Content is protected !!