காங்கோ குடியரசில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 287ஆக உயர்வு
இந்த வாரம் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய ஆப்பிரிக்க நாட்டின் கிழக்கில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தின் அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மேலும் 205 பேர் படுகாயமடைந்தனர், அதே நேரத்தில் 167 பேர் காணாமல் போயுள்ளனர். ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளார், மேலும் மனிதாபிமான உதவி […]













