வியட்நாமை உலுக்கும் வெப்பநிலை – வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை
வியட்நாமில் வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியிருப்பதனால் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை நேற்று முன்தினத் தான் ஹோ (Thanh Hoa) வட்டாரத்தில் வெப்பநிலை 44.1 பாகை செல்சியஸாகப் பதிவாகியது. இதற்கு முன் அந்தப் பகுதியில் பதிவான ஆக அதிக வெப்பநிலை 43.4 பாகை செல்சியஸாகும். இதுபோன்ற வெப்பநிலை மீண்டும் மீண்டும் பதிவாகக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக வியட்நாமைச் சேர்ந்த பருவநிலை மாற்ற நிபுணர் குறிப்பிட்டார். வியட்நாமில் கோடைக்காலம் தொடங்குகிறது. அது இன்னும் ஆக அதிக வெப்பமான […]













