ஜெர்மனியில் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
தென்மேற்கு ஜேர்மனியில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு ஜேர்மனியில், Baden-Wuerttemberg மாநிலத்தில் உள்ள Zollernalbkreis கவுண்டியில், கடும் மழையுடனான வானிலை நிலவியது. இதன்காரணமாக பெருபாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிறிய நிலச்சரிவுகள் போக்குவரத்து நிலைமைகளை முற்றிலும் பாதித்துள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













