Site icon Tamil News

சீனாவில் கடும் மழை: 240,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

சீனாவில் கடும் மழையால் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடும் மழை காரணமாக கிட்டத்தட்ட 250,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யாங்ட்சி உள்ளிட்ட ஆறுகளில் நீரின் அளவு பெரிதும் அதிகரித்தது. சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டது.

கடந்த சில மாதங்களாக சீனா மோசமான பருவநிலையை எதிர்நோக்கி வருகிறது. தொடர் கனமழை, அனல் காற்று ஆகியவற்றால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வகைகளை ஆக அதிக அளவில் வெளியேற்றும் நாடு சீனா. அது, பருவநிலை மாற்றத்துக்கு வழிவிடுவதாகவும் தீவிரமான, மேலும் கீழுமான வானிலை நிகழ்வுகளை அடிக்கடி ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடும் மழையால் அன்ஹுய் மாநிலத்தில் 991,000 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூலை 2) 242,000 பேரை வீடுகளிலிருந்து வெளியேற்றவேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் சின்ஹுவா குறிப்பிட்டது.

அன்ஹுயில் உள்ள யாங்ட்சி ஆற்றின் பகுதியில் நீரின் அளவு அபாயக்கட்டத்தைத் தாண்டியதாகவும் தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் அது கூறியது. அம்மாநிலத்தில் மேலும் 20 ஆறுகள், ஆறு ஏரிக்கள் ஆகியவற்றிலும் கனமழை காரணமாக நீரின் அளவு அபாயக்கட்டத்தைத் தாண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version