Site icon Tamil News

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : சீனா விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

காசாவில் இராணுவ நடவடிக்கைகளை விரைவில் நிறுத்துமாறு இஸ்ரேலிடம், சீனா வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களுக்கு தப்பிச் செல்ல ரஃபா எல்லையை பயன்படுத்துகின்றனர்.

வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் “அப்பாவி பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், ரஃபாவில் இன்னும் பேரழிவு தரும் மனிதாபிமான பேரழிவைத் தடுக்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின்படி, போரில் பலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 28,000  தாண்டியுள்ளது. காசாவின் குடியிருப்பாளர்களில் கால் பகுதியினர் பட்டினியால் வாடுகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச நாடுகள் பலவும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version