Site icon Tamil News

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயம்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸ் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அபு மர்சூக் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான், இஸ்ரேல், பலஸ்தீன அதிகாரிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடனும் ரஷ்யா தொடர்புகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் அலி பகிரி கானியும் மொஸ்கோவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை ரஷ்யா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் அமைதி தீர்வைக் கண்டறியும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் அலி பகிரி கனியும் தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் கலுசினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜகரோவா கூறினார். பகிரி கனி ஈரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version