Site icon Tamil News

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விடுமுறை வழங்கும் கிரீஸ்!

கிரீஸில்  சுற்றுலா பயணிகளுக்கு இலவச விடுமுறை வழங்குவதற்காக விசேட திட்டங்களை முன்வைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிரீஸில் ஏற்பட்ட காட்டுத்தீ சுற்றுலா பயணிகளின் வருகையை கணிசமாக குறைத்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு விசேட திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி விடுமுறையைக் கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு இப்போது ரோட்ஸில் ஒரு வார காலம் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கிரீஸ் பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், 2024 ஆம் ஆண்டு வசந்த கால மற்றும் இலையுதிர் கால இடைவெளியில் தாராளமான சலுகையை வழங்கியுள்ளார்.

Exit mobile version