Tamil News

சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றார்.

தமிழில் ‘ஐயா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

சமீபத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.

இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், நயன்தாரா ‘GQ இந்தியா’ மேகசின் நடத்தும் விருது விழாவில் ‘மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024’ விருதை வென்றிருக்கிறார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்குகிறார்கள் ஹீரோயின்கள். அப்படி, விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார் நயன்தாரா.

Exit mobile version