Site icon Tamil News

அதிக செலவு செய்யும் 10 அமைச்சகங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

அதிக செலவு செய்யும் பத்து (10) அமைச்சுக்களின் செலவுகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, இது தொடர்பான அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கை தொடர்பான தனது அரசாங்கத்தின் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் அமைப்பில் ஒரு தேசிய கொள்கை இல்லாதது மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பின்னடைவு போன்ற ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“எங்களிடம் நிலையான கொள்கைகள் இருக்க வேண்டும். தேசிய கொள்கைகள் குறித்த அறிக்கையை வழங்கிய குழு ஒன்றை நாடாளுமன்றம் நியமித்துள்ளது. இந்த தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் அதிகாரப்பகிர்வு நடைபெறலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்கக் கட்டமைப்பை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version