Site icon Tamil News

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு உதவித்தொகை வழங்கும் அரசாங்கம்

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு உதவி செய்யும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

கொவிட் பாதிப்பு, சர்வதேச அளவில் தொழில் மந்த நிலை காரணமாக, சிங்கப்பூர் நாட்டில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் ‘ஸ்கில்ஸ்பியூச்சர்’ ஆதரவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டொலர் வரை நிதியுதவி வழங்கப்படும்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது தங்கள் நிறுவனங்கள் நஷ்டம் அடையும் போது வேலை இழப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஆண்டின், தேசிய தினப் பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்ததாவது:

வேலையை இழந்தோருக்கு, ஸ்கில்ஸ்பியூச்சர் ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஆறு மாதங்கள் வரை நிதியுதவி வழங்க உள்ளோம். இந்தப் பணம், அவர்கள் வேலை தேடுவதற்கும், தொழில் பயிற்சி மேற்கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம், எனத் தெரிவித்தார். சில நாடுகளில் வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.
அதை விட சிறப்பாகச் செய்யச் சிங்கப்பூர் அரசு விரும்புகிறது.

ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டம் குறித்து விவரங்களை, விரைவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிடுவார் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version