Site icon Tamil News

செயலற்ற ஜிமெயில் கணக்குகளை நீக்கத் தயாராகும் கூகுள்

நாளை (01) முதல் மில்லியன் கணக்கான பயனர்களின் செயலற்ற ஜிமெயில் கணக்குகளை நீக்கத் தொடங்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் பயன்படுத்தப்படாத கணக்குகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, Google Drive, Docs, Calendar, Meet மற்றும் Google Photos பயன்பாடுகளில் உள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் பயனர்கள் இழப்பார்கள்.

கணக்கை நீக்குவதற்கு முன், பயனர்களுக்கு அவர்களின் ‘ஜிமெயில் கணக்கு நீக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது’ என்று பல அறிவிப்புகள் அனுப்பப்படும்.

இதன் மூலம் கணக்குகளை மீண்டும் இயக்க கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்களிடமிருந்து பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கை கட்டமைப்பின்படி, கணக்குகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version