Site icon Tamil News

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன இறக்குமதியை இனியும் மூடி வைக்க அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டில் எமக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க, ஒரு டொலர் கூட இல்லாத நிலையில் இருந்தோம். அதனால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களைின் இறக்குமதியை நிறுத்த வேண்டியதாயிற்று.

எனினும், தற்போது இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.  எனினும், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீடித்துள்ளன.  தேவைக்கு ஏற்ப சில வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

சுற்றுலாத் துறைக்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். தேவைக்கேற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டள்ளது. இதை நாம் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம். இப்போது எங்களிடம் 5.5 பில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது. நாட்டின் தேவைக்கேற்ப அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Exit mobile version