Site icon Tamil News

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, இன்று கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 148,000 ரூபாவாக குறைந்துள்ளது.

நேற்றைய தினம் இதன் விலை 149,000 ரூபாவாக காண்பட்டது.

இதேவேளை, 161,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்க பவுனின் விலை இன்றைய தினம் 160,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் இதனை தெரிவிக்கின்றன.

Exit mobile version