Site icon Tamil News

ஜெர்மனியில் உதவி பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் சமூக உதவியை பெற்று வருகின்ற மாணவர்களுக்கான சலுகைகள் அதிகரிக்கப்படுகின்றன.

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு சமூக உதவி பணம் வழங்க்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜெர்மனியில் பேர்க் கில்ட் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி பணத்தை பெறுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதாவது பாடசாலை மாணவர் ஒருவர் கெரியன் ஜெப் என்று சொல்லப்படுகின்ற பாடசாலையில் கல்வி கற்கின்ற நிலையில் விடுமுறையின் போது வேலைக்கு செல்ல கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாடசாலை விடுமுறையின் போது வேலை செய்தால் இந்த வருமானம் சமூக உதவி பணத்தில் சேர்க்கப்பட்டு கணிக்கப்பட மாட்டாது என்றும் தெரியவந்துள்ளது.

அதாவது பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவன் இந்த விடுமுறை காலங்களில் 2500 யுரோக்களை பணமாக பெற்றார் கூட இந்த பணமானது சமூக உதவி பணத்தில் கணிக்கபட மாட்டாது என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாடசாலை கல்வி கற்றால் மட்டுமே இவ்வகையான சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரியவருகின்றது.

Exit mobile version